TNPSC TAMIL MATERIALS - THIRUKKURAL - TNPSC Group 4, Group 2A Samacheer Book Study Materials - Tamil

TNPSC Group4, Group2A Tamil study materials from samacheer books class 6th to 12th standard in one word. It is very useful for TNPSC new Students. This material is very helpful to get the Governtment job.

demo-image

Home Top Ad

Responsive Ads Here

வியாழன், 5 ஏப்ரல், 2018

demo-image

TNPSC TAMIL MATERIALS - THIRUKKURAL



திருக்குறள் 
35105102

  • திரு + குறள் = மேன்மை பொருந்திய குறள்.
  • ஈரடி குறள் வெண்பாக்களால் ஆனது.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • தமிழ் மொழியிலுள்ள அறநூல்களில் முதன்மையானது.
  • அடையடுத்த கருவியாகு பெயர்.
  • மொத்த அதிகாரங்கள் - 133.
  • மொத்த குறள்கள் - 1330.
பிரிவுகள் :

1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்  - 4 இயல்கள் 
                                   பாயிரவியல்     -  4  அதிகாரங்கள்
                                   இல்லறவியல் - 20 அதிகாரங்கள்
                                   துறவறவியல் - 13 அதிகாரங்கள்
                                   ஊழியல்            -    1 அதிகாரம் 
2. பொருட்பால் - 70 அதிகாரங்கள் - 3 இயல்கள் 
                                  அரசியல்        -  25 அதிகாரங்கள்
                                  அங்கவியல் - 32 அதிகாரங்கள்
                                  ஒழிபியல்     -  13 அதிகாரங்கள்
3. காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்  - 2 இயல்கள் 
                                  களவியல் - 7 அதிகாரங்கள்
                                 கற்பியல் -  18 அதிகாரங்கள்
வேறு பெயர்கள்:
  • உலகப்பொதுமறை 
  • வாயுறை வாழ்த்து 
  • பொதுமறை 
  • பொய்யாமொழி 
  • தெய்வநூல் 
  • உத்தரவேதம் 
  • தமிழ்மறை 
  • முப்பால் 
  • திருவள்ளுவப்பயன் 
  • திருவள்ளுவம் 
  • பொருளுரை 
  • முதுமொழி 


மொழிபெயர்ப்பு:
  • 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • லத்தீன் - வீரமாமுனிவர் 
  • ஆங்கிலம் - ஜி.யு.போப் 
பதிப்பு:
முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் - மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 
                                                                            ஆண்டு - 1812
                                                                               இடம்  - தஞ்சை
உரை எழுதியவர்கள் - பதின்மர்: 
  1. தருமர்  
  2. மணக்குடவர் 
  3. தாமத்தர் 
  4. நச்சர் 
  5. பரிதி
  6. பரிமேலழகர்  
  7. திருமலையர்
  8. மல்லர் 
  9. கவிப்பெருமாள் 
  10. காளிங்கர் 
சிறந்தது - பரிமேலழகர் உரை 
          
       "உடைமை" என்னும் பெயரில் 10 அதிகாரங்கள் உள்ளன.
       7 சீரால் அமைந்தது.
       7 என்னும் எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் உள்ளது.
       அதிகாரங்கள் - 133 ⇒ 1+3+3 = 7
       குறள்கள் - 1330 ⇒ 1+3+3+0 = 7
பழமொழி:
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • பழகு தமிழ்ச்  சொல்லருமை நாலிரண்டில் 
புகழுரைகள்:
⇴  தமிழ் மனிதன் இனிய உயிர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படுகிறது.

⇴  மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை .

⇴  அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் 
     குறுகத் தரித்த குறள்  - அவ்வையார் 

⇴  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார் 

⇴  வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன் 

⇴  இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே - பாரதிதாசன் 

⇴ உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் - கால்டுவெல் 

⇴ சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் - காந்தியடிகள் 

⇴ உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

⇴ இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது 

⇴ இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள் 

⇴ திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ  ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது -திரு.வி.க 

⇴  திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால்,  ஒரு மொழி இருப்பதாக  உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது - கி.ஆ.பெ.விசுவநாதம்.




Comment Using!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC Study Materials Tamil Medium - Polity - President

இந்திய அரசியலமைப்பு குடியரசுத் தலைவர் தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருத்தல்  வேண்டும் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்...

640px-India_flag_emblem