TNPSC Study Materials Tamil Medium - Polity - President - TNPSC Group 4, Group 2A Samacheer Book Study Materials - Tamil

TNPSC Group4, Group2A Tamil study materials from samacheer books class 6th to 12th standard in one word. It is very useful for TNPSC new Students. This material is very helpful to get the Governtment job.

test banner

Home Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

TNPSC Study Materials Tamil Medium - Polity - President

இந்திய அரசியலமைப்பு
குடியரசுத் தலைவர்

தகுதிகள்:
  • இந்தியக் குடிமகனாக இருத்தல்  வேண்டும்
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
  • அரசாங்கப் பணியில்  பதவி வகித்தல் கூடாது
  • மக்களவை உறுப்பினரின் தகுதி பெற்றிருக்க வேண்டும்


தேர்தல்:
வாக்காளர் குழாம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
1. நாடாளுமன்ற ஈரவை (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்கள்
2. மாநில சட்டமன்ற பேரவை (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விகிதாச்சார அடிப்படை - ஒற்றை மாற்று வாக்கு மூலம்
ரகசிய வாக்களிப்பு முறை
பதவிக்காலம்: 5 ஆண்டுகள் (மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்)
பதவிநீக்கம்:

  • அரசியலமைப்பை மீறி நடந்தால் பதவி நீக்கம்  செய்யலாம் 
  • அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒரு அவை குற்றச்சாட்டு கூறலாம். ஒரு அவை குற்ற விசாரணை செய்ய வேண்டும் என தீர்மானம்  விரும்பினால் 14 நாட்களுக்கு முன்னரே தீர்மானம் அறிவிக்கப்பட வேண்டும். இவ்வறிவிப்பில் அவையின் 4-ல் ஒரு பகுதியினர் (1/4) கையொப்பமிட வேண்டும். அவையின் தீர்மானம் மொத்த உறுப்பினர்களில் 3-ல் 2 (3/2) பகுதியினர் கையொப்பமிட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசுத்தலைவர் பதவிநீக்கம் செய்யப்படுவார்.

அதிகாரங்கள்:
1. நிர்வாக அதிகாரங்கள்:

  • இவர் தன்னுடைய அதிகாரங்களை நேரடியாக அல்லது தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்துவார் 
  • மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இவரிடம் உள்ளது. இதற்கென தனி அமைச்சரவை உள்ளது.
  • மத்திய அரசாங்கத்தின் அனைத்து  நிர்வாக அதிகாரங்களும் இவர் பெயரிலேயே செயல்படுத்தப்படும் 
  • பாதுகாப்புப்படையின் தலைமை தளபதி இவரே 

நியமனம்:
  1.  பிரதமர் 
  2. பிரதமரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்கள் 
  3. இந்திய தலைமை வழக்கறிஞர் 
  4. இந்திய கணக்காயர் - தலைமைத் தணிக்கையர் 
  5. இந்தியாவின் தூதுவர்கள் 
  6. பிரதிநிதிகள் 
  7. உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி 
  8. மற்ற நீதிபதிகள் 
  9. உயர்நீதிமன்றகங்களின் தலைமை நீதிபதிகள்
  10. பிற நீதிபதிகள்
  11. மாநில ஆளுநர்கள் 
  12. துணைநிலை ஆளுநர்கள் 
  13. மத்திய அரசுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 
  14. தேர்தல் தலைமை ஆணையர்கள் 
  15. முப்படைகளின் தலைவர்கள் (தரை,கடல்,விமானம்)


  • பிரதமரின் பரிந்துரைப்படி அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் 
  • மத்திய தேர்வணைக்குழு தலைவரையோ, அங்கத்தினரையோ பதவிநீக்கம் செய்யும் அதிகாரம்(உச்ச நீதிமன்ற அறிக்கைப்படி)
  • உச்ச நீதிமன்ற நீதிபதியையோ, தேர்தல் ஆணையரையோ பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்(நாடாளுமன்ற இரு சபையிலும், சிறப்பு அறுதி பெரும்பான்மை மூலம் முடிவெடுத்தால்)
1976 ~~ 44-வது சட்டத்திருத்தம் 
குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர்.
ஒரு  அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்ப குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு.
2. சட்டமன்ற அதிகாரங்கள்:
  • ஆண்டிற்கு இரு முறையாவது நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் உண்டு 
  • மக்களவையை கலைக்கும் அதிகாரம் உண்டு 
  • மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமனம் செய்வார் 
  • ஆங்கிலோ-இந்தியன் 2 பேரை மக்களவைக்கு நியமனம் செய்வார் 
  • நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார் 
  • குடியரசுத்தலைவரின் அங்கீகாரமும், கையெழுத்தும் இல்லாமல் எந்த மசோதாவும் சட்டமாகாது 
  • நாடாளுமன்றம் கூடாத காலங்களில் அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் உண்டு 
3.நிதித் தொடர்பான அதிகாரங்கள்:
  • இவரின் முன் அனுமதி இருந்தால் மட்டுமே நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் 
  • எதிர்பாராச் செலவு நிதி இவர் பொறுப்பில் உள்ளது 
  • அவசரமாக ஏற்படும் செலவினங்களுக்கு இந்த நிதியிலிருந்து முன்பணம் வழங்கலாம் 
  • நிதி ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் உண்டு 
4.நீதி தொடர்பான அதிகாரங்கள்:
குற்றவாளிகளை மன்னிக்கவோ, தண்டனைகளைக் குறைக்கவோ, நிறுத்தி வைக்கவோ அதிகாரம் உண்டு 


4. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:
  1. போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் கிளர்ச்சி (தேசிய நெருக்கடி விதி - 352)
  2. மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்கு முறை செயலற்றுப் போகும் நிலை (மாநில நெருக்கடி விதி - 356)
  3. நிதிநிலை நெருக்கடி (விதி - 360)









































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC Study Materials Tamil Medium - Polity - President

இந்திய அரசியலமைப்பு குடியரசுத் தலைவர் தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருத்தல்  வேண்டும் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்...