TNPSC Study Materials - TAMIL - Ettuthogai - TNPSC Group 4, Group 2A Samacheer Book Study Materials - Tamil

TNPSC Group4, Group2A Tamil study materials from samacheer books class 6th to 12th standard in one word. It is very useful for TNPSC new Students. This material is very helpful to get the Governtment job.

test banner

Home Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

TNPSC Study Materials - TAMIL - Ettuthogai

தொகைநூல்கள் 


  • 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம். அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் சங்கஇலக்கியங்கள். 
  • சங்க நூல்கள்:  எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  • பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும் வழங்கப்படும் 
  • சங்ககால இலக்கிய உத்திகள்: உள்ளுறை உவமம், இறைச்சி 
  • இவை குறிப்புப்பொருள் உத்தி எனவும் வழங்கப்படும் 
  • உள்ளுறை உவமம்: வெளிப்படையாகத்  தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது.உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது. 
  • இறைச்சி:  கூற வந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைப்பது.

எட்டுத்தொகை 


நற்றிணை   நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) 
இத்திறத்த எட்டுத் தொகை.

புறநூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து 
அகநூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு 
அகப்புறநூல்: பரிபாடல் 

1. புறநானூறு 

 புறம்+நான்கு+நூறு 
⤃ புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது 
⤃ வேறுபெயர்கள்: புறம், புறப்பாட்டு
⤃ பாவகை: அகவற்பா
⤃ திணைகள்: 11
⤃ துறைகள்: 65
⤃ சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், கொடை, புகழ், வெற்றி, ஆட்சிச்சிறப்பு, கல்வி, அறவுணர்வு  பற்றிக் கூறுகிறது.
⤃ தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உணர்வை உணரவும் உதவுகிறது.
⤃ பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றது.
⤃ கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார் (பிற்காலத்தவர்)
⤃ தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை 
⤃ தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை
⤃ ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜி.யு.போப் 
⤃ ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக            இருந்த நூல்களுள் ஒன்று .
⤃ தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு            விளங்குகிறது 

2.அகநானூறு 

⧞ அகம்+நான்கு+நூறு 
⧞ அகம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது 
⧞ வேறுபெயர்: நெடுந்தொகை 
⧞ அடி எல்லை: 13 முதல் 31 வரை 
⧞ பாவகை: அகவற்பா 
⧞ பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றது
⧞ தொகுத்தவர்: மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர்  
⧞ தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி 
⧞ பிரிவுகள்: 1. களிற்றியானை நிரை - 120 பாடல்கள் 
                          2. மணிமிடை பவளம்     - 180 பாடல்கள் 
                          3. நித்திலக்கோவை         - 100 பாடல்கள் 
⧞ பாடல்கள்: குறிஞ்சி    - 2 ,8
                           முல்லை  - 4, 14
                            மருதம்     - 6, 16
                            நெய்தல்  - 10, 20
                            பாலை      - 1, 3, 5

3. ஐங்குறுநூறு 

⭃ ஐந்து+குறுமை+நூறு 
⭃ திணைக்கு  நூறு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்கள் 
⭃ அடி எல்லை: 3 முதல் 6 வரை 
⭃ பாவகை: அகவற்பா 
⭃ கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
⭃ தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் 
⭃ தொகுப்பித்தவர்: சேர மன்னன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல்                                                               இரும்பொறை 
⭃ பாடல்களைப் பாடியவர்கள்: குறிஞ்சி   - கபிலர் 
                                                                முல்லை - பேயனார் 
                                                                 மருதம்    - ஓரம்போகியார் 
                                                                 நெய்தல்  - அம்மூவனார் 
                                                                 பாலை     - ஓதலாந்தையார் 

4. நற்றிணை 

⇔ நன்மை + திணை = நல் + திணை 
⇔ எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது நூல் 
⇔ அடி எல்லை: 9 முதல் 12 வரை
⇔ பாவகை: அகவற்பா
⇔ சங்ககால புலவர் பலரால் பல்வேறு காலங்களில் பாடப்பெற்றது 
⇔ அகப்பொருள் பற்றிய பாடல் ஆயினும் புறப்பொருள் பற்றிய செய்திகளும்,         தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன 
⇔ கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார்
⇔ தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த மாறன் வழுதி (பாண்டிய மன்னன்)
⇔ பாடியவர்கள்: 275
⇔ ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல்,                           அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர் தம் உயரிய பண்புகளை                      தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது 

5. குறுந்தொகை 

↝ குறுமை + தொகை 
↝ அடி எல்லை: 4 முதல் 8 வரை
↝ பாவகை: ஆசிரியப்பா 
↝ பாடல்கள்: 401
↝ கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார்
தொகுத்தவர்: பூரிக்கோ 
பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் பண்பு, அறவுணர்வு           போன்றவற்றை அறியலாம் 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC Study Materials Tamil Medium - Polity - President

இந்திய அரசியலமைப்பு குடியரசுத் தலைவர் தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருத்தல்  வேண்டும் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்...